சூரிய ஒளியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் இயங்கக்கூடிய மோட்டார் பம்புகள்
இந்த சூரிய ஒளியின் மூலம் இயங்கக்கூடிய மோட்டார் பம்பு களை சோலார் மோட்டார் பம்ப் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக மோட்டார் பம்புகள் அதன் குதிரை திறனை (Horse Power) HP பொருத்து வகைப்படுத்தப்படுகிறது. சூரிய ஒளி மின்சாரம் மூலமாக அனைத்து HP மின் மோட்டார்களை இயக்க முடியும். உதாரணமாக 1HP, 2 HP, 3HP, 5HP, 7.5 HP, 10 HP, 15HP, 20HP.
எந்த வகையான மோட்டார் பம்புகள் சூரிய ஒளி மின்சாரம் மூலம் இயக்க முடியும்
பொதுவாக மின் மோட்டார்களை நாம் கிணற்றிலோ அல்லது ஆழ்துளை கிணற்றில் பயன்படுத்துகிறோம். இதற்கு நாம்
- ஆழ்துளை நீர்மூழ்கி மோட்டார் - Submersiable Motor Pump
- கிணற்று நீர் மூழ்கி மோட்டார் - Openwel Motor pump
- மேல் மோட்டார் - Mono black Motor Pump
என்கின்ற மூன்று வகையான மோட்டார் பம்புகள் ஐ பயன்படுத்துகிறோம் இவை அனைத்தையுமே சூரிய ஒளி மின்சாரம் மூலமாக இயங்க வைக்க முடியும்.
சோலார் மோட்டார் பம்ப் சிறப்புகள்
- சோலார் மோட்டார் பம்ப் பயன்படுத்தும்போது தினமும் குறைந்தது ஏழு மணி நேரம் தடையில்லா மின்சாரம் பெற முடியும்.
- அறிவிக்கப்பட்ட மின் தடை தற்காலிகமான மின்தடை மும்முனை மின்சார நேரத்திற்காக காத்திருக்க வேண்டாம்.
- சோலார் மோட்டார் பம்ப் பராமரிப்பது மிக எளிது
- மேலும் சூரிய ஒளி மின்சார மோட்டார் பம்பு களை அமைக்க ஒரு முறை முதலீடு செய்தால் போதும் குறைந்தது முப்பது வருடங்களுக்கு பயனளிக்கும்